ஐக்கியம் Phoenix, AZ USA 47-1100X 1இந்த நேரத்தில் என் நல்ல நண்பர் போஸ்வர்த், அவர்கள் மூலம் ஒரு குழல் வாத்திய இசையைக் கொண்டிருக்க போகிறோம். சகோ. போஸ்வர்த் (சகோ. போஸ்வர்த் ஒரு இசையை கொடுக்கிறார். - ஆசிரியர்) என்னே, சகோ. போஸ்வர்த், அது மிகவும் அருமையாய் இருந்தது. நாங்கள் நிச்சயமாக அதை பாராட்டுகிறோம். நீர் அங்கே உயர்த்தி வாசிக்கும் போது, சிலுவையின் கீழே என்ற அந்த சிறிய கோரஸை நாம் பாட முடிந்தால், நான் வியப்படைகிறேன். அது எனக்கு பிடித்தமான ஒன்று. நீங்கள் அதை இசைக்க முடிந்தால், சரி, சகோ. போஸ்வர்த். (சகோ. போஸ்வர்த் சிலுவையின் கீழே என்ற கோரஸை இசைக்கிறார்.) என்னை அந்த சத்தம் அந்த பழைய எழுப்புதல் நேரத்தில் உள்ளதை போலிருந்தது. அநேக காலங்களுக்கு முன்னால்,சொல்லுங்கள், சகோதரன் மற்றும் சகோதரி மெக் ஆனல்லியுடன் இங்கே இன்றிரவுள்ள இந்த சிறிய சந்திப்பிற்காக நாங்கள் உண்மையாகவே மகிழ்ச்சியடைகிறோம். நான் வியக்கிறேன். சகோ. கூப்பர் இப்பொழுது நீங்கள் ஒலிப்பெருக்கியில் சில காரியங்களை சொல்ல விரும்பி, ஏதாவது வார்த்தையை நீங்கள் கொண்டிருப்பீர்களானால், (சகோ. கூப்பர் ஒரு சில வார்த்தைகளை பேசுகிறார் - ஆசிரியர்) ஆம் ஐயா சகோ. மேக் ஆனல்லி தேசத்தில் அடுத்த சிறந்த வேட்டைக்காரராக உள்ளார். நான் போயிருந்த போது, அவர் சிறிந்த வேட்டைக்காரர். சரி இங்கே இருக்கும் மனைவியிடமிருந்து ஒரு வார்த்தையை நான் விரும்புகிறேன். சரி தேனே, நீ என்ன சொல்ல போகிறாய்? (சகோதரி. மேடா, நான் அரிசோனாவில் இருப்பதற்கு கிடைக்கப் பெற்ற சிலாக்கியத்திற்காகவும்,சகோதரன் மற்றும் சகோதரி மெக் ஆனல்லி போன்ற நண்பர்களை சந்திக்க கிடைத்த சிலாக்கியத் திற்காகவும் நிச்சயமாக மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறுகிறார். - ஆசிரியர்) சகோ. போஸ்வர்த், அரிஸோனாவையும், இங்குள்ள ஜனங்களையும் குறித்து, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (சகோ. போஸ்வர்த் ஒரு சில வார்த்தைகளை பேசுகிறார்.) (சகோ. மேக் ஆனல்லி வேட்டையை குறித்து குறிப்பிடுகின்றார்.-ஆசிரியர்.) (சகோ. போஸ்வர்த் மற்றொரு இசையை கொடுக்கிறார்.- ஆசிரியர்) சகோதரன் மெக் இந்த பிரயாணத்தில் நாங்கள் இங்கு இருக்கும் போது, எங்களுக்காக அனைத்தையும் செய்திருந்தீர்கள். ஏதாவது ஒரு நாள் நாங்கள் மீண்டும் திரும்ப ஒன்று கூடுவோமென்று சர்வ வல்லமையுள்ள தேவனை நம்புகிறேன். உங்கள் மனைவியின் சத்தத்தை கேட்க நான் எப்போதும் விரும்புவதுண்டு. சகோதரி மெக் ஆனல்லி நான் பல மைல்கள் அப்பால் இருக்கலாம். ஆனால் நீங்கள் இதை இசைக்கும் போது, (சகோதரி ஆனல்லி ஒரு சில வார்த்தைதைகளை பேசுகிறார்.- ஆசிரியர்) சரி நன்றி. சகோதரி மெக் ஆனல்லி. அது மிக மிக அருமையாக இருந்தது. ஓ அவர்கள் ஒரு சிறிய பயந்த சுபாவமுடைய சகோதரியாக இருக்கிறார்கள் நான் அதை விரும்புகிறேன். சகோ. போஸ்வர்த் அந்த பழைய குழல் வாத்திய இசைக்கருவியில் மற்றொரு இசையை கொடுப்பீர்களா? சகோதரன் மெக்கிற்காகவும்,அவர்களுக்காகவும் மற்றொரு இசையை கேட்க விரும்புகிறோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரனே. சரி சகோ. போ ஸ்வர்த். (சகோ. போஸ்வர்த் மற்றொரு இசையை கொடுக்கிறார்.- ஆசிரியர்.) சகோ. போஸ்வர்த் அது அருமை. அதிகமான நன்றிகள். சகோ. கூப்பர், நீங்கள் சொல்வதற்கு வேறு வார்த்தைகள் ஏதேனும் உண்டா? சொல்வதற்கு ஏதேனும் உண்டா? சொல்வதற்கு ஏதும் இல்லையா? தேனே, ஓ, என்னே. சகோ. மெக், இந்த ஒலிப்பெருக்கியில் சீக்கிரமாய் ஏதாவது எங்களுக்கு சொல்லுவீர்களா? (சகோ. மெக் ஆனல்லி வேட்டையைப் பற்றி கூடுதலாக ஒரு சில வார்த்தைகளை பேசுகிறார். - ஆசிரியர்) சரி அருமை சகோ. போஸ்வர்த், நீங்கள் ஏதாவது வார்த்தையை சொல்ல விரும்புகிறீர்களா? வேறு ஏதாவது சொல்லுங்கள். (சகோ. போஸ்வர்த் ஒன்றறை நிமிடங்கள் பேசுகிறார். - ஆசிரியர்.)...